Sunday, September 22, 2013

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றிருப்பதாக தெரியவருகிறது!! (6 ஆம் இணைப்பு)

Sunday, September 22, 2013
இலங்கை::வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
 
இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை  பெற்றுக் கொள்ளும் என்ற நிலையில் எஞ்சியுள்ள 1 ஆசனமும் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்து 4 ஆசனங்களாக மாறலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 4 ஆசனத்தையும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
 
மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 ஆசனத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்றும் எனவும் இது 5 ஆசனமாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன்படி போனஸ் ஆசனத்துடன் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment