Thursday, September 26, 2013
இலங்கை::மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வழி செய்யும், 13வது சட்டதிருத்தத்தை, வடக்கு
மாகாணத்தில் அமல்படுத்த வேண்டும்' என, இலங்கை அரசிடம், இந்தியா
வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில், 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம், வடக்கு மாகாண
தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சி
அமைக்க உள்ளது.
இதுகுறித்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் சமீபத்தில், மூன்று மாகாண தேர்தல்கள்,
சுமுகமாக நடந்தது திருப்தியளிக்கிறது. வடக்கு மாகாண மக்களின் முன்னேற்றத்துக்காக,
மாகாண அரசும், ராஜபக்சே அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இலங்கையில் மத்திய, மாகாண
அரசுகள், ஆக்கப்பூர்வமாக சேர்ந்து செயல்பட்டால் தான், போரினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு விடிவு ஏற்படும்.
மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வழி செய்யும்,
13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவோம்' என, இலங்கை அரசு, சர்வதேச சமுகத்திடம்
உறுதியளித்திருந்தது. இதை, அந்நாட்டு அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, இந்திய
தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment