Wednesday, September 25, 2013

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மும்பைக்கு கொண்டு செல்லமுயன்ற 10 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான தங்கத்துடன் மூவர் கைது!

Wednesday, September 25, 2013
இலங்கை::இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மும்பைக்கு கொண்டு செல்லமுயன்ற 10 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான தங்கத்துடன் மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.,,
 
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்த சந்தேகநபர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களுள் பெண் ஒருவரும் அடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2 ஆயிரம் கிராம் தங்கத்தை சந்தேகநபர்கள் மும்பைக்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யட்டவர்களிடம் தொடர்ந்தும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment