Thursday, August 22, 2013

(புலிகள் ஆதரவு)இலங்கை அகதிகளான , ஈழ நேரு மற்றும்,செந்தூரன்,சவுந்தரராசன் இலங்கைக்கு நாடு கடத்த இடைக்கால தடை!

Thursday, August 22, 2013
சென்னை::(புலிகள் ஆதரவு)இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி, இது தொடர்பாக ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் கணவர் ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மத்திய-மாநிலஅரசுகள் செப்டம்பர் 27-ம் தேதிக்குள் விளக்கம் பதில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment