இலங்கை::புலிப் பயங்கரவாதிகள் மக்களுக்கு நீரை வழங்காததற்கு எதிராகவே குண்டுகளை பாவித்தோமே தவிர, அப்பாவி மக்களுக்கு எதிராக குண்டுகளை பாவித்தது கிடையாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று நடத்திருக்கக்கூடாத துர்ப்பாக்கிய சம்பவமானது வெலிவேரிய ரத்துபஸ்வல பிரச்சினையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி கிளப்பியுள்ளது. ஐ.தே. கட்சிக்குள் இன்று பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. அதனை மூடிக் கொள்வதற்கே இப்பிரச்சினையை கிளப்பியுள்ளனர்.
நீருக்காக குண்டுகளைப் பாவித்தோம். அன்று புலிகள் மாவிலாறு நீர்த்தேக்கத்தை மூடியபோது எமது தலைவர் குண்டுகளைப் பாவித்தார்.
புலி பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆரம்பத்தை ஜனாதிபதி அன்று ஆரம்பித்து அதனை முடித்துக் காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து தொழிற்சாலைகளை மூடினால் தான் ஜே.வி.பி.க்கு அரசியல் இருப்பு இருக்கின்றது அதற்கே முயற்சிக்கின்து.
எனவேதான் இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தவிடாது நாட்டைப் பாதுகாக்கும் பாதுகாப்புச் செயலாளர் தொடர்பாக ஜே.வி.பி. யினர் அதிகமாக பேசுகின்றனர்.
மக்களுக்கு மாவிலாறு நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்தவிடாது தடுத்த பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் குண்டுகளைப் பாவித்தோமே தவிர, அப்பாவி மக்களுக்கு எதிராக ஒரு போதும் குண்டுகளைப் பாவித்ததில்லை.

No comments:
Post a Comment