Friday, August 16, 2013

யாழ். மாநகர சபையின் ஆட்சிக் காலம் ஒரு வருடத்திற்கு நீடிப்பு!

Friday, August 16, 2013
இலங்கை::ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நிர்வாகத்தின் கீழ் உள்ள யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
 
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 10ஆம் பிரிவின் 2ஆம் உப பிரிவின் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த கால நீடிப்புச்செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதற்கான பத்திரத்தில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கையொப்பமிட்டுள்ளார்.
 
யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் பதவி காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையிலேயே எதிர்வரும் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment