Friday, August 16, 2013

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பினர் மீது தாக்குதல்!

Friday, August 16, 2013
இலங்கை::நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் மீது  மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது.
 
நெடுந்தீவில் மிக அண்மையில் (புலி)கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.
 
இச்சம்பவத்தில்  (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளருமான ரணசிங்க ஆரியசேன (வயது 40), சைமன் யேசுதாஸன், யேசுதாஸன் அன்ரனிற்றா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment