Thursday, August 15, 2013

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடத்தப்பட வேண்டும்: கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா!

Thursday, August 15, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும், நம்பகமான முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா வெளியிட்டுள்ள செய்தியிலேயே  மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய மனிதநேய உதவிகளை இந்திய வழங்கி வந்துள்ளது. அதேவே

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமானதாகும். 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவதற்கான அரசியல் யோசனைகள் தொடர்பாக நம்பகரமான பேச்சுவார்த்தைகள் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆக்கபூர்வமாக வழிவகுக்கும்.

நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே, சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

போரின் முடிவு, எல்லா சமூகங்களும் சிறிலங்காவில் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ளை, பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக பகைமையில் பெரும்பாலும் தமிழ்மக்களின் உரிமைகள்,சேமநலன்களை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment