Thursday, August 15, 2013
இலங்கை::இந்தியாவின் மோட்டார் சைக்கிள்கள், முச்க்கர வண்டிகளில் குண்டுகளைப் பொருத்தி தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
இலங்கை::இந்தியாவின் மோட்டார் சைக்கிள்கள், முச்க்கர வண்டிகளில் குண்டுகளைப் பொருத்தி தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
இந்தியாவில் மோட்டார் சைக்கிள், முச்க்கர வண்டி தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் வைத்து, அந்த வண்டிகளில் குண்டுகளை பொருத்தி, இலங்கைக்கு இறக்குமதி செய்து முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய புலிகள் திட்டமிட்டிருந்தாக கைதுசெய்யப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர் ஒருவர் தகவல்களை வெளியிட்டுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இந்த திட்டத்தை தீட்டியிருந்தாகவும் அந்த காலத்தில் சீ 4 ரகத்தை சேர்ந்த வெடி மருந்து ஆயிரத்து 500 கிலோவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெட்டநேட்டர்களையும் புலிகள் இறக்குமதி செய்திருந்தாக கைதுசெய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர் தகவல் வழங்கியதாக சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து போர் ஆரம்பிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது எனவும் அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.
போர் நிறுத்த காலத்தில் புலிகளுக்கு புலனாய்வு தகவல்களை திரட்டியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பெர்ணான்டோ சமில்தாஸ் என்ற நபரே இந்த தகவல்களை வழங்கியுள்ளதாக அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சட்;டமா அதிபர் நீதிமன்றத்தில் இந்த தகவல்களை கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த நபர் புலிகளின் தலைவரின் பாதுகாப்பு பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

No comments:
Post a Comment