Thursday, August 15, 2013

வீசா காலம் நிறைவடைந்த நிலையில், தங்கியிருந்த இந்தியர்கள் இருவர் அம்பாறை சவலக்கடையில் கைது!:-சிங்கபூரின் குடிவரவு சட்டத்தை மீறிய இலங்கை பெண்னொருவர் சிங்கப்பூரில் கைது!

Thursday, August 15, 2013
இலங்கை::வீசா காலம் நிறைவடைந்த நிலையில், தங்கியிருந்த இந்தியர்கள் இருவர் அம்பாறை சவலக்கடையில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்றை ஊடக பிரிவு இந்த வெளியிட்டுள்ளது.

வீசா காலம் நிறைவடைந்த நிலையில், தொழில் செய்து வந்த இவர்கள் சவலக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட இவர்கள் தலா 25 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்லையாக வேண்டு

இதனிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்திருந்த குறித்த நபர் கோப்பாயில் பணிப்புரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
 
சிங்கபூரின் குடிவரவு சட்டத்தை மீறிய இலங்கை பெண்னொருவர் சிங்கப்பூரில் கைது!
 
சிங்கபூரின் குடிவரவு சட்டத்தை மீறிய இலங்கை பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து சென்ற பாரவூர்தி ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாரவூர்தியில் மறைவான இடமொன்றில் தங்கி இருந்த நிலையில், 29 வயதுடைய குறித்த பெண் குடிவரவுத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரும் குறித்த பாரவூர்தியின் சாரதியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு குறைந்த பட்சம் 3 கசை அடிகளும், 2000 டொலர் அபராதம் அல்லது ஆறு மாத சிறைதண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment