Thursday, August 15, 2013

இலங்கையில் சிறு வயது திருமணங்கள் அதிகரிப்பு: யுனிசேப்!

Thursday, August 15, 2013
இலங்கை::2009 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சிறு வயது திருமணங்கள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக யுனிசேப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
பின்தங்கிய கிராமிய பிரதேசங்களிலேயே இவ்வாறான சிறுவயதுத் திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதுதவிர, 20 வயதுக்கு குறைவான இளம் பெண்கள் தாய்மையுறும் நிலைமையும் 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், நகரப் பிரதேசங்களில் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்;படும் நிலையும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
எனவே, சிறுவயது பெண்கள் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுகின்றமை தொடர்பில் தெளிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முனைப்புக் காட்டவேண்டும் என்று யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
அத்துடன், ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெரிதும் பாதிப்பற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment