Friday, August 16, 2013
இலங்கை::சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டே நாம் நாட்டை மென்மேலும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப வேண் டியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவையில் தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரை யாற்றுகையில்; "மக்கள் சேவை மகேசன் சேவை"யாகும். இதனைக் கருத்திற் கொண்டு அரச உத்தியோகத்தர்கள் தம்மிடம் வருவோ ரின் கண்ணீரைத் துடைத்து மகிழ்ச்சியுடன் திருப்பியனுப்ப வேண்டும். கருணையுடன் அவர்களை நோக்கி அவர்களுக்கான தேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பொதுவாகவே நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி அதிலிருந்தே உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படுவர். எனினும் தமிழ் மொழியில் பணிபுரியக்கூடியோர் இத்தகைய பரீட்சைகளிலிருந்து தெரிவு செய்யப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. இது உங்கள் தவறல்ல. கடந்த யுகத்தில் சமூக மற்றும் கல்வி மட்டத்திலுள்ள பிரச்சினைகளே இதற்குக் காரணமாகும்.
சிலர் நாம் அரச சேவையை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதனை இனவாதமாக்குவதாகவும் கூறினர். எனினும் நாம் 30 வருடம் நிலவிய அநீதியை இல்லாதொழிக்கும் வகையில் விசேட பரீட்சையொன்றை நடத்தி அதன் மூலம் உங்களை தெரிவு செய்துள்ளோம். உங்கள் சேவை மிகவும் பொறுப்பு வாய்ந்தது. அந்த பொறுப்பை நீங்கள் முறையாக நிறை வேற்றவேண்டும். இன, மத, குல, உயர்வு, தாழ்வு என்ற பேதங்களுக்கு அப்பால் உங்களிடம் வருபவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு பார்க்கப்படாமல் முன்னெடுப்பதே அரச சேவையாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment