Friday, August 16, 2013
இலங்கை::மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து தேர்தல்கள் செயலகத்தில் இதுவரை 95 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகபடியாக 23 முறைபாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 17 முறைப்பாடுகளும், கண்டி மாவட்டத்தில் 11 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அரச வளங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்து இதுவரை 20 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment