Friday, August 16, 2013

இலங்கையுடன் வர்த்தகம் இருமடங்காக்க திட்டம்!

Friday, August 16, 2013
இலங்கை::இலங்கையுடனான வர்த்தகத்தை அடுத்த மூன்றாண்டுகளில் இருமடங்காக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இலங்‌கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற 67-வது
இந்திய சுதந்திர தின விழாவி்ல் இந்தியாவிற்கான ஹை கமிஷனர் ஒய். கே. சின்ஹா தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது: கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையில்லா வர்த்தக முறை மூலம் இது வ‌ரையில் சுமார் 8 மடங்கு வர்த்தகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்வி சுகாதாரம், விவசாயம் , மீன்பிடி போன்ற திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளதையடு்த்து அவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.
 
வரும் 2015-ம் ஆண்டிற்குள் 50 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் ,இந்தாண்டு இறுதிக்குள் 13 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அவர் கூறினார். இத்திட்டமானது இந்திய அரசு உலகில் பிற நாடுகளில் மேற்கொண்ட மானிய திட்டங்களில் மிகப்பெரிய ஒன்றாகும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment