Friday, August 16, 2013
பூஞ்ச்::இந்திய எல்லைக்குள் ஊடுருவி 5 இந்திய வீரர்களை பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பூஞ்ச் எல்லைக் கோட்டுப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து 10-வது முறையாக பாகிஸ்தான் படையினர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய முகாம்களின் மீது மீண்டும் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் மற்றும் சில பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர்.
பூஞ்ச் எல்லைப் பகுதியில் உள்ள பலகோட் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். மோர்டார் குண்டுகளையும் அவர்கள் வீசினர்.
இருதரப்பிலும் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டை விடியவிடிய நீடித்ததாகவும், இன்னும் சண்டை தொடர்வதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment