Friday, August 16, 2013

இலங்கைக்கு கஞ்சாகடத்த முயன்றவர்கள் கைது!

Friday, August 16, 2013
ராமநாதபுரம்::இலங்கைக்கு, கஞ்சா கடத்தும் கும்பலுக்காக, கஞ்சா வினி@யாகம் செய்ய வந்த நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்; ஏழு கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது.இலங்கைக்கு, பொருட்களைக் கடத்தி செல்வது அதிகரித்து உள்ளது. போதை பொருளான கஞ்சா, அதிகளவில் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது.
 
தமிழக "கியூ' பிரிவு போலீசார், இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதாக, கடந்த மாதம் இரண்டு பேரை கைது செய்து, ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் பதுக்கியிருந்த, 100 கிலோ கஞ்சாவை, கண்டுபிடிக்க முடியவில்லை.தற்போது ராமேஸ்வரம், அரியான்குண்டு பகுதியைச் சேர்ந்த புஷ்பம் தன்ராஜ், இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்து.
 
கிழக்கு கடற்கரையில், வாகன சோதனை நடத்தியபோது, அம்பாசிடர் காரில் வந்த, ராமேஸ்வரம், தியாகராஜன், 47, தங்கச்சிமடம், அரிராமச்சந்திரன், 30, வாடிபட்டி, தமிழரசன், 26, ராமேஸ்வரம், கர்ணன், 55, ஆகியோரை விசாரித்தனர்.புஷ்பம் தன்ராஜ்க்கு, கஞ்சா சாம்பிள் கொண்டு சென்றது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்து, ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment