Wednesday, August 14, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு ஆதரவு!

Wednesday, August 14, 2013
டொரன்டோ::இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா கலந்துக் கொள்ள வேண்டும் என்று, டொரன்டோவில் உள்ள பாதுகாப்பு கல்லூரியின் பேராசிரியர் எடம் சப்பிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று, கனேடிய பிரதமர் ஸ்டெபன் ஹாபர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு இலங்கை
யில் நடைபெறும் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணித்தால், இலங்கை தனிமைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகள் இலங்கையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்பதன் ஊடாக, நாட்டின் உண்மையான நிலவரங்களை அறிந்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

தன்சானியா, பொட்சுவானா, ஸ்வாசிலேண்ட், ருவாண்டா, மொரீசியஸ் மற்றும் பெனின் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment