Wednesday, August 14, 2013
இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த, இந்திய கைதிகள் நால்வர் இந்திய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு அமைய, இந்த கைதிகள் இந்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜீ.பீ குலதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கு, போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இவர்களில் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் அடங்குகின்றனர்.
இந்தக் கைதிகள் தமது எஞ்சிய சிறைத்தண்டனையை இந்திய சிறைச்சாலைகளில் அனுபவிக்க நேரிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், மேலும் 8 கைதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட இந்திய கைதிகள் இருவர் திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment