Wednesday, August 14, 2013

ஆயுதங்களுடன் பனாமாவில் பிடிப்பட்ட வட கொரியா கப்பலில் ஐ.நா. அதிகாரிகள் இன்று சோதனை!

Wednesday, August 14, 2013
பனாமா::பனாமா நாட்டு கடல் வழியாக 240 டன் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வட கொரியா நாட்டு கப்பலை பனாமா கடற்படையினர் கடந்த மாதம் 15ம் தேதி சிறை பிடித்தனர். அந்த கப்பலில் இருந்த கேப்டன் மற்றும் 35 கப்பல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆபத்தை விளைவிக்கக் கூடிய பயங்கர அணு ஆயுதங்கள் அந்த கப்பலில் உள்ளதாக பனாமா குற்றம் சாட்டியது. இதனை வட கொரியா மறுத்து வருகிறது.

பனாமா நாட்டு அதிகாரிகள் பிடிபட்ட கப்பலை சோதனையிட்ட போது கப்பலின் மாலுமி தற்கொலைக்கு முயன்றது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பிடிபட்ட ஆயுதங்களை பழுது நீக்குவதற்காக வட கொரியாவுக்கு அனுப்பிவைத்ததாக கியூபா விளக்கம் அளித்தது.

அணு ஆயுதங்களை வட கொரியா தயாரித்து வருவதை அறிந்து பிற நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யவோ, பிற நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவோ கூடாது என வட கொரியாவுக்கு ஐ.நா. சபை தடை விதித்துள்ளது.

இந்த  தடையை மீறி வட கொரியா மீண்டும் அணு ஆயுதங்களை இந்த கப்பல் மூலமாக இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டிய பனாமா, ஐ.நா. அதிகாரிகள் பிடிபட்ட கப்பலில் உள்ள ஆயுதங்களை சோதனையிட வேண்டும். அதன்பிறகே கப்பலை விடுவிப்போம் என திட்டவட்டமாக கூறிவிட்டது.

இதனையடுத்து, இந்த கப்பலை சோதிப்பதற்காக ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நேற்று பனாமா நாட்டின் மன்சானில்லோ துறைமுகத்தை வந்தடைந்தனர்.

இன்று அந்த கப்பலை சோதனையிடும் அவர்கள் சோதனையின் முடிவுகளை ஐ.நா. சபையில் தாக்கல் செய்வார்கள்.

பிடிபட்ட கப்பலின் உள்ளே ஏராளமான அணு ஆயுதங்கள் உள்ளதாக உறுதிபடுத்த முடியாத வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment