Wednesday, August 21, 2013

வங்குரோத்து அரசியல் மூலம் நாட்டை இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

Wednesday, August 21, 2013
இலங்கை::குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தாய்நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை யாரும் வெளியிடக் கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எந்த விடயத்தையும் வெளிப்படையாக செல்வதற்கு நாட்டில் சுதந்திரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் வீட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
 
வங்குரோத்து அரசியல் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள், இலங்கை தொடர்பில் உலகம் முழுவதும் தவறான கருத்தை கொண்டுச் சென்று நாட்டை இக்கட்டான நிலைக்கு தள்ள முயல்கின்றது.
 
இதனை முறியடித்து நாட்டை பாதுகாப்பது அனைவரதும் கடமை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்..
 
மற்றையவர்களுக்க மரியாதை செலுத்தும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்

No comments:

Post a Comment