Wednesday, August 21, 2013

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை!

Wednesday, August 21, 2013
இலங்கை::இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான ஆணையாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யுத்த காலத்தின் போது இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து, இவர்களை தமது சொந்த இடத்திலேயே குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment