Thursday, August 22, 2013
புது டெல்லி::உலகிலேயே உயரமானதும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதுமான லடாக் பிராந்தியத்தில் உள்ள தெளலத் பேக் ஓல்டி ஓடு தளத்தில் தனது போர் விமானத்தை கொண்டு போய் நிறுத்தியுள்ளது
இந்திய விமானப்படை. இந்த ஓடு
தளமானது, சீன எல்லைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி லடாக் பகுதியில் ஊடுறுவலையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டு வரும் சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
விமானப்படையின் சி 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் அந்த ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில்தான், இங்குள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் இருதரப்பு படைகளுக்கும் இடையே பூசல் வெடித்தது நினைவிருக்கலாம்.
.jpg)
No comments:
Post a Comment