Thursday, August 22, 2013

புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் முக்கியதொரு கோட்டையாக விளங்கிய ஆனையிறவுப் பகுதி சுற்றுலாத்தளமாக!

Thursday, August 22, 2013
இலங்கை::புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் முக்கியதொரு கோட்டையாக விளங்கிய ஆனையிறவுப் பகுதியை சுற்றுலாத்தளமாக்கப் போவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவுபப் பகுதி இலங்கை இராணுவத்தின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது. இப்பகுதியை 2000ஆம் ஆண்டளவில்  புலிகள் எதிர்பாராத தாக்குதலின் மூலம் கைப்பற்றினர். 
 
நான்காம் ஈழப் போரில்  புலிகள் ஆனையிறவுப் பகுதியிலிருந்து சமர்கள் எதுவுமின்றி பின்வாங்கினர். 
 
இந்நிலையில் ஆனையிறவை சுற்றலாத்தளமாக்கும் நோக்கில் அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். சுற்றலாப் பயணிகளின் பார்வைக்காக கேர்னல் காமினி குரலத்தினவின் படம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த இராணுவ உறுப்பினர் 1991 ஆம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு படைத்தளம் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது அதை தடுக்கும் நோக்குடன் உயிரை மாய்த்தவர். இவரின் தியாகத்தையே இராணுவத்தினர் ஆனையிறவுப் பகுதியின் சுற்றுலாத் தளத்தின் அம்சமாக்கியிருக்கின்றனர். 
 
புலிபயங்கரவாத்திலிருந்து இலங்கை நாட்டை  மீட்ட இராணுவத்தினரின் தியாகத்தின் அடையாளமாக ஆனையிறவு விளங்குகின்றது எனவும் இதனை இலங்கை வரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு தெரியப்படுத்த இவ்விடத்தை சுற்றுலாத்தளமாக மாற்றவுள்ளதாகவும் இராணுவம் தெரிவிக்கிறது. 

No comments:

Post a Comment