இலங்கை::அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து இராணுவம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. முக்கியமான சர்வதேச நிகழ்வு ஒன்றில் இலங்கையின் இரண்டு சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த உயர் இராணுவ அதிகாரிகளுக்கு இந்த சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்தது. சந்தர்ப்பம் நிராகரிக்கப்பட்ட ஒரு அதிகாரிக்கு ஏற்கனவே நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பின்னர் அமெரிக்க அரசாங்கம் அவர் மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும், தற்போது மீண்டும் சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கு குறித்த அதிகாரிக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோருக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச இராணுவ நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இவர்கள் விண்ணப்பித்திருந்தனர். எனினும், மனித உரிமை காரணங்களைக் காட்டி குறித்த இரண்டு அதிகாரிகளின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சில தரப்பினர் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை நேரடியாகவோ மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படு;ம் முயற்சிகள் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment