Thursday, August 22, 2013

இந்தியாவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது: சஜின்வாஸ் குணவர்தன!

Thursday, August 22, 2013
இலங்கை::இந்தியாவுடன் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது தொடர்பில் இந்தியா எவ்வித சர்ச்சைகளையும் கிளப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக இந்தியா எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் இதனால் அமர்வுகளை பகிஷ்கரிக்குமாறும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், இந்திய பிரதமரிடம் கோரியுள்ளனர். அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்தள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.
 
அண்மையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு ஏற்பாட்டுப் பணிகளை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் கனேடிய பிரதிநிதிகளும் உள்ளடங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமர்வுகளின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment