Thursday, August 22, 2013
இலங்கை::புலிகளின் தமிழீழ கனவு இன்னும் உயிருடனேயே உள்ளது. தப்பிச்சென்ற புலிகள் சர்வதேச நாடுகளில் தஞ்சம் அடைந்து இலங்கைக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை செய்கின்றனர். அதில் ஒன்றுதான் பொதுநலவாய மாநாட்டிற்கு எதிரான செயற்பாடுகள் என்று பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை::புலிகளின் தமிழீழ கனவு இன்னும் உயிருடனேயே உள்ளது. தப்பிச்சென்ற புலிகள் சர்வதேச நாடுகளில் தஞ்சம் அடைந்து இலங்கைக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை செய்கின்றனர். அதில் ஒன்றுதான் பொதுநலவாய மாநாட்டிற்கு எதிரான செயற்பாடுகள் என்று பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலளிப்போம். புலம்பெயர்ந்த தமிழர்களே இலங்கைக்கு எதிராகவும் இராணுவத்திற்கு எதிராகவும் போலியான பிரசாரங்கள் மேற்கொள்கின்றனர். இந்நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு படைகளின் தலைமைக்காரியாலய அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-
எதிர்வரும் காலங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் பொதுநலவாய மாநாடு, நவநீதம்பிள்ளையின் வருகை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு என்பன இலங்கைக்கு முக்கியமானதொன்றாகும். அரசியலை விட நாட்டின் பாதுகாப்பே முக்கியமானதாகும். புலிகளை ஆயுத முனையில் தோல்வியடையச் செய்தோம். ஆனால், அவர்களின் தமிழீழ இலக்கு இன்னும் தோல்வியடையவில்லை. உயிருடனேயே உள்ளது.
தப்பித்துச் சென்ற புலிகள் சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்து இலங்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். தமிழீழ இலக்கை அடைய எந்தளவிற்கு செயற்பட முடியுமோ அந்த எல்லைகளையும் கடந்துள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் வெளிப்பாடே. இவர்களின் பிரதான நோக்கம் தற்போதைய ஆட்சியை மாற்றி, அரசியல் ரீதியாக தமது இலக்குகளை அடைவதாகும். அதேபோன்று பொதுநலவாய மாநாட்டை குழப்புவது என்பனவும் இவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.
இது குறித்து பல்வேறு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளன. ஆகவே, ஊடகவியலாளர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பில் பதிலளிப்போம். ஆனால், குழப்பகரமான சூழலில் பாதுகாப்பு துறையினரின் கெளரவம் குறையும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது. ஏனெனில் அது எதிரிகளுக்கு தமது இலக்குகளை அடைய சாதகமாகி விடும் எனக் கூறினார்.

No comments:
Post a Comment