Thursday, August 22, 2013
இலங்கை::ஆளும் கட்சிக்குள் விருப்பு வாக்கு தொடர்பான பிரச்சினைகளும் மோதல்களும் தெற்கில் உள்ளனவே தவிர, வடக்கில் அவ்வாறு எந்தப் பிரச்சினையும் கிடையாது. எப்படியிருப்பினும் செப்டெம்பர் மாதம், 21 ஆம் திகதி நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலே இடம்பெறும் என்று அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின்போது விருப்புவாக்குப் பிரச்சினை மற்றும் குடும்ப உறவினர்கள் தேர்தல்களில் இணைத்துக்கொள்ளப்பட்டதால் சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெறுமா என்பவை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்கவினால் நிலையியற் கட்டளை 23 (2) இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் சுசில் அங்கு மேலும் கூறுகையில்;-
அரசியல்வாதிகளின் புதல்வர்கள், உறவினர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதும் அதே நேரம் அரசியலுக்குள் நுழைவதும் இலங்கையில் புதிய விடயம் அல்ல. வரலாற்றில் அது இடம்பெற்றே வருகின்றது என்பதுடன் அண்டை நாடான இந்தியாவிலும் அமெரிக்க நாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகின்றது.
இவ்வாறு சிரேஷ்ட அரசியல்வாதிகளின் புதல்வர்கள் மற்றும் உறவினர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதால் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுமா என்று கேள்வி எழுப்புவது நியாயமற்றதாகும்.
மேலும், விருப்பு வாக்குப் பிரச்சினையும் மோதலும் ஆளும் கட்சிக்குள் இருக்கின்றன. எதிர்க்கட்சியில் அவ்வாறான விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லாத காரணத்தாலேயே ஆளும் கட்சிக்குள் இருக்கின்றன.
எப்படி இருந்த போதிலும் வடக்கைப் பொறுத்தவரையில் இந்த விருப்பு வாக்குப் பிரச்சினைகளோ அல்லது மோதல்களோ கிடையாது. எனவே, எதிர்வரும் செப்டெம்பர் மாதம், 21 ஆம் திகதி நடைபெறும் தேர்தல்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாகவே இடம்பெறும் என்பதை இங்கு கூறிக்கொள்கின்றேன் என்றார்.

No comments:
Post a Comment