Wednesday, August 21, 2013

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான் கதறல்!

Wednesday, August 21, 2013
இஸ்லாமாபாத்::போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ வீரர்களின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது.

இதுதொடர்பாக இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழும்பி வரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டின் பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் இந்திய படைகள் கொல்வதாக குற்றம் சாட்டி, இதனை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை கடந்த 12-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
 
இதனை மறுக்கும் எதிர் தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றியது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் ஓய்ந்தபாடாக இல்லை. கடந்த ஒரு வார காலமாக இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் இன்று அதிகாலை சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஸ்கார்டூ எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள ஷக்மா ராணுவ நிலையில் பணியாற்றிய பாகிஸ்

நேற்று பின்னிரவு இந்திய படைகள் நடத்திய அதிரடி தாக்குதல் இன்று அதிகாலை 2.15 மணி வரை நீடித்ததாகவும் இந்த தாக்குதலில் கேப்டன் சர்ஃபாஸ் இறந்துவிட்டதாகவும் மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். 

தான் தளபதி சர்ஃபாஸ் என்பவரை இந்திய ராணுவம் இன்று சுட்டுக்கொன்று விட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment