Friday, August 23, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்பவர் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுபவர் : ராவணா சக்தி!

Friday, August 23, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை என்பவர் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுபவர் என ராவணா சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அமெரிக்கா சம்பந்தப்பட்ட உலகில் எந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அது பற்றி அவருக்கு பிரச்சினைகள் இல்லை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யும் நவநீதம்பிள்ளையின் வருகையை தமது அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக ராவணா சக்தி அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு எதிராக செயற்படும் அவர், இலங்கையை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தி கால்களில் மிதித்து நசுக்க முயற்சித்து வருகிறார். நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் வெளிநாட்டு சக்திகள் இலங்கையை தலைதூக்க விடுவதில்லை எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார். 
 
 

No comments:

Post a Comment