Friday, August 23, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதேச சபை உப தலைவர்கள் ஆளுங்கட்சியுடன் இணைவு!

Friday, August 23, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதேச சபை உப தலைவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.
 
கூட்டமைப்பின் வடமராச்சி பிரதேச சபையின் உப தலைவர்  சாந்த சொரூபன், பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தை பெற்றதுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக பாடுபட போவதாக உறுதியளித்துள்ளனர்.
 
வடக்கில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி,அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தாம் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment