Friday, August 23, 2013

இந்தியாவின் அழுத்தத்தினாலேயே நவநீதம் பிள்ளை இலங்கை வருகிறார்: அத்துரலியே ரத்ன தேரர்!

Friday, August 23, 2013
இலங்கை::இந்தியாவின் அழுத்தத்தினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக ஜாதிக ஹெல உருமய கட்சியின் தவிசாளர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட சம்பவம் தொடர்பில் மாத்திரம் அவர் கவனத்திற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர் இந்தியா இலங்கைக்கு வருகைத்தந்து  பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கவில்லையா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில் குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

ஜீ.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை  இலங்கை வருவதற்கு எதிர்பார்ப்பில் உள்ளார்.  எனவே நாம் அடைந்த ஜனநாயகம் தொடர்பில் அவருக்கு எடுத்துக் கூறவுள்ளோம்.  நான்கு வருடங்களுக்கு முன்னர் நிலவிய பயங்கரவாதம் காரணமாக நாம் அனைத்தையும் இழந்தோம். எனவே தற்போது பொருளாதார ரீதியில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு எமது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு தெளிவுப்படுத்துவதற்கு இது மிகவும் சிறந்த ஒரு தருணமாக அமையும். எவருடைய முறைப்பாடுகளுக்கும்
பதிலளிக்க வேண்டி ஏற்படாது.

No comments:

Post a Comment