Monday, August 19, 2013

இலங்கையில், நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சந்திப்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொள்ள வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்!

Monday, August 19, 2013
இலங்கை::இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளானது இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வரும் நிலையில் இவ் அறிவிப்பை இலங்கை நேற்று விடுத்துள்ளது.

இந்தியாவிற்கான விஜயத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இன்று திங்கட்கிழமை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளளார்.

இதன்போது அவர், பொதுநலவாய மாநாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்கான அழைப்பையும் விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'24 வருடங்களின் பின்னர் பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆசியாவில் இடம்பெறுகின்றது. இம்மாநாட்டில் இந்திய பிரதமரும் கலந்துகொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் பெரும் விருப்பத்துடன் உள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட்டை சந்தித்த அமைச்சர் பீரிஸ், இம்மாநாட்டில் இந்திய பிரசன்னம் அதிகளவு இருப்பதை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் சந்திப்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment