Monday, August 19, 2013
தாமர்சா::பீகார் மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றோர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 35
பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
பீகாரின் தாமர்சா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டு இன்று காலை பாட்னா நோக்கி சென்ற ராஜ்யா ராணி எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க ஒரு குழுவினர் முயன்றனர்.
அந்த சமையம் விரைவு ரயில் ஒன்று கடந்து சென்றதில் 35 பேர் உடல் துண்டாகி உயிரிழந்தனர். அந்த ரயில் மோதியதில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:
Post a Comment