Monday, August 19, 2013
மணிலா::பிலிப்பைன்சில், பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில், பலியான, 52
பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. காணாமல் போன, 68க்கும் மேற்பட்டோரை தேடும் பணி,
தீவிரமாக நடந்து வருகிறது.
பிலிப்பைன்சின், சிபு நகர துறைமுகம் அருகே, 870 பேருடன் சென்ற, "தாமஸ் அகினோ'
என்ற பயணிகள் கப்பல் மீது, நேற்று முன்தினம் இரவு, "சல்பிசியோ எக்ஸ்பிரஸ்' என்ற
சரக்குக் கப்பல், பயங்கரமாக மோதியது. இதில், பயணிகள் கப்பல், பெருத்த சேதமடைந்து
மூழ்கியது.இதுபற்றிய தகவலறிந்த பிலிப்பைன்ஸ் கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள்,
சம்பவ இடத்திற்கு விரைந்து, 751 பேரை காப்பாற்றினர். கப்பலில் பயணம் செய்தவர்களில்,
80க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இவர்கள் அனைவரும், கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், மீட்புப்
படையினர், தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு
உள்ளன.பயணிகள் கப்பலில் இறந்தவர்களில் பெரும்பாலோர், பெண்கள் மற்றும் குழந்தைகள்.
மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து, கடலில் படலமாக மிதந்து
கொண்டிருக்கிறது.
சரக்கு கப்பல் மோசமாக சேதமடைந்தாலும், அது இன்னும் மூழ்கவில்லை. அந்த கப்பலில்
உள்ள, 36 ஊழியர்கள் பத்திரமாக உள்ளனர்.இந்த விபத்து குறித்து, தீவிர விசாரணை
நடத்தும்படி, பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோ உத்தரவிட்டு உள்ளார்.



No comments:
Post a Comment