Monday, August 19, 2013

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி!

Monday, August 19, 2013
இலங்கை::எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
 
இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
 
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்திலிருந்து வருகைத்தரவுள்ள 17 பிரதிநிதிகள் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment