Monday, August 19, 2013

இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரீஸ், பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பு!

Monday, August 19, 2013
புதுடில்லி::இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரீஸ், இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை டில்லியில் சந்தித்து பேசினார். இலங்கை தலைநகர் கொழும்பில், நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வருமாறுஅழைப்பு விடுக்க இந்தியா வந்தார்..
 
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்
 
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச  தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்காகவே வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
 
அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது...
 
தமிழக (புலி ஆதரவு) கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங் பங்கேற்பதை விரும்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இந்தியா சென்றுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்

தாம் இந்தியாவின் அழைப்பை ஏற்றே இந்தியா  வந்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தமிழக பிரச்சினை என்பது இந்தியாவுடன் தொடர்புடையது இந்தநிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் உயரிய பங்கேற்பை இலங்கை எதிர்ப்பார்பதாக  ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்

No comments:

Post a Comment