Monday, August 19, 2013

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்: த ஹிந்து!

Monday, August 19, 2013
சென்னை::இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் உள்ள இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்ற விசாரணைக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளதாக “த ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படும் போது அவர்கள் மனிதாபிமானமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாகவும், அதன் காரணமாக மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லை தாண்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சதீவு தொடர்பான விடயம் குறித்து மேலதிக நடவடிக்கை ஒன்றும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக “த ஹிந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment