Monday, August 19, 2013
இலங்கை::திருகோணமலை - மாபல்பீச் பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப் படையினால் நடத்திச் செல்லப்படும் விடுமுறை விடுதியிலேயே இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானப்படை கொப்ரால் ஒருவர் குறித்த இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின்கமான்டர் என்டி விஜேசூரிய தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் விமானப்படை கொப்ரால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் தொடர்பு காரணமாக இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
காதல் பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment