Monday, August 19, 2013

திருகோணமலையில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்க தீர்மானம்: கிழக்குமாகான முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்!

Monday, August 19, 2013
இலங்கை::கிழக்கு மாகாணத்தின் நிர்வாக தலைநகரான திருகோணமலையில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கான விளையாட்டரங்கை அமைக்க தீர்மானித்துள்ளதாக கிழக்குமாகான முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்துள்ளார்.
 
அதற்கான முன்னேற்பாடுகளை இலங்கை கிரிக்கட் நிறுவனமும்- கிழக்கு மாகாண சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட உரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
 
நாட்டில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் முதலாவது சர்வதேச விளையாட்டரங்காக இது அமையும்.
 
திருமலை மாவட்டத்தின் அடுத்த கட்ட அபிவிருத்தியை நோக்கிய பயணத்தின் ஒரு அங்கமாகவே இச் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமையவுள்ளது. திருமலை மாவட்ட இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கொண்டுள்ள ஆர்வம்இ அவர்களின் திறமைகள் மேலும் விருத்திசெய்துகொள்வதற்கு உந்துசக்தியாக இம் மைதானம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment