Tuesday, August 27, 2013
இலங்கை::ரவான பலயவின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைத் தலைமைக் காரியாலத்திற்கு எதிரில் நேற்றைய தினம் போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளாந்த ஊடக சந்திப்பின் போது கேள்வி எழுப்பபட்டிருந்தது.
போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நவனீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் இருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரு பிக்கு காரியாலயத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாகவும் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment