Tuesday, August 27, 2013
இலங்கை::காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதி நீதவான் என்.பெர்னாண்டோ இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். வடக்கு கிழக்கில் காணாமல் போன 2550 பேர் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சமர்ப்பித்துள்ளார். இந்த ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த அனுமதியளிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர். இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment