Tuesday, August 27, 2013

யாழ்ப்பாணத்தில் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்!

Tuesday, August 27, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சுமார் 30 ஏக்கர் காணியும், பத்து வீடுகளும் தென்மராட்சிப் பகுதியில் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளும் வீடுகளும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. காணி உரிமையாளர்களிடம் இவை ஒப்படைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிரமமான முறையில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தி வந்த தனியார் காணிகளையும் வீடுகளையும் ஒப்படைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment