Tuesday, August 27, 2013

புலி உறுப்பினர்கள் வவுனியா சிறைக்கு மாற்ற நடவடிக்கை!

Tuesday, August 27, 2013
இலங்கை::போதைப்பொருள் பாவனையால் குற்றவாளியாகும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கு சேனபுரவில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பிவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
தற்போது சேனபுர புனர்வா
ழ்வு மையத்தில்,  புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு புனர்வாழ்வளிக்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள்  புலி உறுப்பினர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றிய பின்னர், போதைப்பொருள் பாவனையால் குற்றவாளியாகும் நபர்களை சேனபுரவிற்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இங்கு ஒரே சந்தர்ப்பத்தில் சுமார் ஆயிரம் பேரை புனர்வாழ்வளிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன.
 
தற்போது போதைப்பொருள் பாவனையாளர்கள் 250 பேரை கந்தக்காடு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களை சிறையில் அடைக்காது, புனர்வாழ்வளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பீ.எஸ் விதானகே மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment