Wednesday, August 21, 2013
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்கும் விசேட பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாடு விட்டு நாடு பிரவேசித்தலை தடுத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கண்டு பிடித்தல் போன்றன தொடர்பில் ஜகார்த்தா பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் இலங்கை மற்றும் 13 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
நபர்களின் சட்டவிரோத நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா, மியன்மார், நியூசிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையின் மூலம் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment