Wednesday, August 21, 2013
சென்னை::முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, சத்தியமூர்த்திபவனில் அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஞானதேசிகன் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் பிரச்னையை பொறுத்தவரை, ராமேஸ்வரம் மீனவர்கள் பிரதமரை சந்தித்தபோது 2 ஆலோசனைகளை வலியுறுத்தினர். ராமேஸ்வரம் பகுதியில் கடலை ஆழப்படுத்தினால் இலங்கை எல்லை பகுதிக்கு செல்லாமல் மீனவர்கள் இந்துமகா சமுத்திர கடல் பகுதிக்கு சென்றுவிடுவார்கள். இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இன்னொன்று மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகள் பங்குபெற வேண்டும் என்றார்கள். இதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக முயற்சிக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் பல நாடுகள் ஒத்துழைப்புடன் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கான நடவடிக்கை களை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
ன், விநாயகமூர்த்தி, தங்கபாலு, அகில இந்திய செயலாளர் செல்லகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சுனில்ராஜா தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாணவர் காங்கிர சார் ரத்த தானம் செய்தனர். இன்னொன்று மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகள் பங்குபெற வேண்டும் என்றார்கள். இதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக முயற்சிக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் பல நாடுகள் ஒத்துழைப்புடன் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கான நடவடிக்கை களை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

No comments:
Post a Comment