இலங்கை::கம்பளை உடபலாத்த எதிர்க்கட்சித் தலைவர் பெனடிக்ட் விஜயநாயக்க தலைமையிலான கம்பளை தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. உறுப்பினர்கள் 300 பேர் ஐக் கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் இணைந்து கொண்டனர்.
கம்பளை தொலுவையில் பிரதமர் டி. எம். ஜயரட்ணவின் இல்லத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றின் போது இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந் தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஐ.தே.க. வில் தமக்கு சிறந்த எதிர்காலமொன்று கிடையாது என்ற காரணத்தினாலேயே தாம் அரசாங்கத்துடன் இணைந்து ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கப்போவதாகக் குறிப்பிட்டனர்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் நோக்குடனேயே தாம் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயற்படத் தீர்மானித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். எதிர்வரும மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைக்கப்போவதாகவும் அவர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

No comments:
Post a Comment