Tuesday, August 27, 2013

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை நடத்துகின்றார்!

Tuesday, August 27, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்;டத்தின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததுடன் போதனா மருத்துவமனைக்கும் சென்றுள்ளார்.

இதனிடையே,  அவர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுனர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினசில அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இன்றைய தினம் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர், வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட அரச பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதுதவிர எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை செப்டம்பர் மாதம் இடம் பெறவுள் மனித உரிமை மாநாட்டின் போது கருத்து வெளியிடவுள்ளதுடன், அறிக்கை ஒன்றையும் முன்வைக்கவுள்ளார்.

No comments:

Post a Comment