Tuesday, August 27, 2013
இலங்கை::மூன்றாவது கட்டப் போராட்டம் நடக்கின்றது என்று வீரச் சூளுரைத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் இப்போது பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கிறார். ஜனநாயக வழிகளில் வந்த போராட்டம் முதலாவது கட்டமாம். ஆயுதப் போராட்டம் இரண்டாவது கட்டமாம். இப்போது நடப்பது மூன்றாவது கட்டமாம். தமிழ் மக்களின் போராட்டம் பற்றித் திரும்பியும் பார்க்காமல் தனது பதவியையும் பதவிசார் நலன்களையும் பாதுகாப்பதிலேயே அக்கறையாக இருந்தவர் இப்போது வடக்கில் கட்டங்கள் பிரித்துப் போதனை செய்கிறார். அதனை மக்கள் இரசித்து தன்னை அரியாசனம் ஏற்றுவர் எனப் பகல் கனவும் கண்டு வருகிறார். பதவிப் போட்டி காரணமாக ஒற்றுமை என்றால் என்ன என்பதை மறந்து நிற்கும் தமிழ்க் (புலி)கூட்டமைப்பினரிடம் இவர் தோற்கடிக்கப்பட்டு விட்டார்.
இந்தக் கண்மூடி வித்தைக் கட்டங்கள் தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்குக் காரணம் என்பது படித்த நீதியரசருக்கு விளங்கவில்லை. தமிழசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை பார்த்தால் தலைவர்களின் சுயநலத் தேவைகளுக்காகக் காலத்துக்குக் காலம் கொள்கைகளை மாற்றியதே வரலாறாக உள்ளது. இதில் இப்போது நீதியரசரும் இணைந்து கொண்டுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் தலைமையை கைப்பற்றுவதற்கான ஆயுதமாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சி அக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கான எவ்விதமான செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி சமஷ்டியைக் கைவிட்டுத் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. பின்னர் மாவட்ட சபையை ஏற்பதற்காக அதைக் கைவிட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அவதாரம் எடுத்ததும் பாராளுமன்றப் பதவிகளைப் பாதுகாப்பதற்காக மீண்டும் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டார்கள். இப்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் தமது குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்காக மட்டுமே செயற்படுகின்றார்கள்.
சுயநலத் தேவைகளுக்காக காலத்துக்குக் காலம் கொள்கையையும் போராட்ட வழிமுறையையும் மாற்றியதன் விளைவாகவே தமிழ் மக்கள் மோசமான அழிவுகளையும் இழப்புக்களையும் அனுபவிக்க நேர்ந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் பேசுவதற்கு ஆள் தேவை என்று சம்பந்தன் கொண்டு வந்திருக்கும் நீதியரசருக்கு இந்தச் சின்ன விடயம் கூட விளங்காதிருப்பது வேதனை தருகிறது.
நீதியரசர் குறிப்பிட்ட மூன்று கட்டங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரே விளைவு தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்ததுதான். இனப்பிரச்சினையின் முழுமையான தீர்வை நோக்கிய நகர்வுக்காகக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழரசுக் கட்சி பயன்படுத்தவில்லை. பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் சரத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிடைத்த சந்தர்ப்பங்களை உதாரணமாகக் கூறலாம். தனிநாடு என்று தமிழ் மக்களுக்கு உசுப்பேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்ததும் மாவட்ட சபையுடன் திருப்திப்பட்டார்கள்.
இரண்டாவது கட்டம் என்று நீதியரசர் கூறும் ஆயுதப் போராட்ட கட்டம் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் கறுப்பு அத்தியாயம் எனக் கூறலாம். இக்காலத்திலேயே தமிழ் மக்கள் இடம்பெயர நேர்ந்ததும் இக்காலத்திலேயே. இனப்பிரச்சினையின் தீர்வுக்கு நாட்டில் சாதகமற்ற சூழ்நிலை தோன்றியதற்கான பிரதான காரணம் இக்கால கட்ட செயற்பாடுகளே.
நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமை வகிக்கும் மூன்றாவது கட்டம் எந்தக் கொள்கையும் இல்லாமல் வாய்வீச்சின் மூலம் தமிழ் மக்களை வெறுமையை நோக்கி நடக்கின்றது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்குக் (புலி)கூட்டமைப்புத் தலைவர்களால் ஒரு தீர்ப்பை முன்வைக்க முடியவில்லை.
இத்தலைவர்கள் சுயமாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்துக்கு வர இயலாத அளவுக்குப் புலம் பெயர் அமைப்புக்களின் கட்டுப்பட்டுக்குள் வாழ்கின்றார்கள் புலம்பெயர் அமைப்புக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்பதைக் (புலி)
கூட்டமைப்புத் தலைவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள். இவர்களை வழி நடத்தும் புலம்பெயர் அமைப்புகள் அரசியல் தீர்வை விரும்பவில்லையென்பதால் இவர்களும் அரசியல் தீர்வைத் தவிர்க்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களிடமிருந்து மறைப்பதற்காகச் சர்வதேச சமூகம் என்ற வாய்ப்பாட்டை ஒப்புவிக்கின்றார்கள்.
சர்வதேச சமூகத்துக்கு ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது இந்தத் தேர்தலில் இவர்களின் கோஷம். எதற்காகக ஒற்றுமையைக் காட்ட வேண்டும்? இனப்பிரச் சினைக்கான தீர்வுக்காகவா? அப்படியானால் எத்தகைய தீர்வு என்று மக்களுக்குத் தெரியப் படுத்துவதற்காகத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமே. எந்தத் தீர்வாக இருந்தாலும் சர்வதேச சமூகம் பெற்றுத் தரட்டும் என்று கூறுகின்றார்களா? அது தான் (புலி)கூட்டமைப்பின் நிலைப்பா டென்றால் எங்கள் தீர்வை நாங்கள் தீர்மானிக்க இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேட்பாளர் தமிழக மக்களுக்குக் கூறியதன் அர்த்தம் என்ன? எல்லாமே பொய் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து கொண்ட ஒரு மாத காலத்தினுள்ளேயே பொய்கூறப் பழகிவிட்டார் நீதியரசர்.
சர்வதேச சமூகம் தீர்வுடன் தயாராக நிற்கின்றது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அடுத்த கணமே தீர்வுடன் வந்து இறங்கும் என்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் கதை அளந்தார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தார்கள். ஆனால், சர்வதேச சமூகம் திரும்பியும் பார்க்கவில்லை. இது (புலி)கூட்டமைப்பினரது தேர்தல் கால நாடகம். மக்கள் இதனை நன்கு உணர்ந்துள் ளார்கள். அவர்களைத் தொடர்ந் தும் ஏமாற்ற முடியாது.
தனிநாட்டு மாயையிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்கும் (புலி)புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அரசியல் தீர்வுக்குத் தடையாகச் செயற்படுவதைக் (புலி)கூட்டமைப்பு தொடர்வது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம். எதிர்காலத்தில் தமிழ்ச் சந்ததிக்கு இனப்பிரச் சினையை விட்டுச் செல்வ தற்கான முஸ்தீபு என்றே இதைக் கருத வேண்டும். தமிழ் மக்களின் நலனில் உண்மையாகவே (புலி)கூட்டமைப் புக்கு அக்கறை உண்டென்றால் புலம்பெயர் அமைப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். அதுவரை இவர்கள் பாராளு மன்றக் கதிரைகளிலும் தங்கள் சொந்த சுகபோகங்களிலும் மாத்திரம் அக்கறை செலுத்தும் சுயநல அரசியல் வாதிகளாகவே இருப்பர்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆனால், புலம்பெயர் (புலி)அமைப்புக்களின் தாளத்துக்கு ஆடும் கூட்டமைப்புத் தலைவர்கள் அரசியல் தீர்வைத் தவிர்ப்பது பற்றியே சிந்திக்கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடையக்கூடிய பாதையையே தமிழ் மக்கள் இன்றைய அரசாங்கத்தின் மூலமாகத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழி. இதுபற்றியே தமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானமெடுத்துள்ளனர். அதற்கு இடையூறாக தமிழ்க் (புலி)கூட்டமைப்பு ஒருபோதும் இருக்கக் கூடாது.


No comments:
Post a Comment