Tuesday, August 27, 2013
இலங்கை::இந்தியாவின் இணக்கப்பாடின்றி 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் இந்தியாவின் இணக்கப்பாடின்றி திருத்தங்களை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாகவும் இதனை சர்வதேச உடன்படிக்கையாக கருத வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவின் இணக்கப்பாடின்றி மாற்றங்களை செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், சிங்கள மக்களுக்கு இது புரிவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டர்கள் எனவும், தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment