Tuesday, August 27, 2013

ஆதரவின்மை, சமூக ரீதியாக ஒடுக்கபட்டவர்களின் நலன்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன்: ஞானசக்தி ஸ்ரீதரன்!

Tuesday, August 27, 2013
இலங்கை::ஆதரவின்மை, சமூக ரீதியாக ஒடுக்கபட்டவர்களின் நலன்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன். அவர்களின் குரலாக இருக்கவே விரும்புகின்றேன்.வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான்செயற்பட விரும்புகிறேன்
 
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஏழை மேலும் ஏழையாக அநீதியான சமூக அமைப்புமுறை பற்றி அரங்கத்தில் கேள்வி எழுப்ப இத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றேன்.
 
இந்த நாடு தமிழ் ,சிங்களம், ,முஸ்லீம் ,மலையகத் தமிழர், பறங்கியர், மலாயர் என் அனைத்து இன சமூகங்களின் நாடாக விளங்க வேண்டும் எல்லோரும் இன்புற்றிருக்கத்தான் இந்த நாடு.இன , சாதி , பால் ரீதியான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அரங்கில் கேள்வியெழுப்ப, ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்
 
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காவும், ஊனமற்றவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றவும் நான் படுபடுவேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தேர்தலில் இறங்கியிருக்கிறேன்.
 
எனது சின்னம் வெற்றிலை
எனது இலக்கம் 13
ஞானசக்தி ஸ்ரீதரன்

No comments:

Post a Comment